/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வேடசந்துாரில் முகமூடி கொள்ளையர்கள் ஐவர் கைது
/
வேடசந்துாரில் முகமூடி கொள்ளையர்கள் ஐவர் கைது
ADDED : ஆக 15, 2025 02:35 AM
வேடசந்துார்: வேடசந்துார் நாகம்பட்டியில் முகமூடி அணிந்து கத்தியை காட்டி மிரட்டி நகை பறிப்பில் ஈடுபட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகம்பட்டியில் ரோட்டோர தோட்டத்து வீட்டில் வசிப்பவர் கார் டிரைவர் அய்யனார் 45. இவரது மனைவி பாண்டியம்மாள் 42. இவர் முன்னாள் ஊராட்சி உறுப்பினர். மூன்று நாட்களுக்கு முன்பு இரவு 9:00 மணிக்கு பாண்டியம்மாள் வீட்டில் சமையல் செய்தபோது முகமூடி அணிந்தபடி புகுந்த கொள்ளையர்கள் பாண்டியம்மாளை அரிவாள், கத்தியை காட்டி மிரட்டி 2 பவுன் நகையை பறித்து சென்றனர்.
வேடசந்துார் போலீசார் விசாரணையில் நாகம்பட்டி தி.மு.க., பிரமுகர் மாசியை கொலை செய்த அதே பகுதியை சேர்ந்த பெருமாள் கவுண்டன்பட்டி மதுமோகன் 28, எரியோடு குருக்களையன்பட்டி சரவணகுமார் 28, அவர்களது கூட்டாளிகளான பாச்சலுார் வினோத்குமார் 32, தங்கப்பாண்டி 32, நிலக்கோட்டை ரெட்டியாபட்டி ஈஸ்வரன் 22, ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து இரண்டு பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.