ADDED : டிச 08, 2025 06:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல்லில், படைவீரர் கொடிநாளையொட்டி, கலெக்டர் சரவணன் நிதி வழங்கி கொடிநாள் வசூலை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், படைவீரர் குடும்பத்தினருக்கான தேநீர் உபசரிப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், தொகுப்பு நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை, போர்ப்பணி ஊக்க மானியம், திருமண உதவித்தொகை என மொத்தம் 17 பேருக்கு ரூ.4 லட்சம், ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களை ராணுவப் பணிக்கு அனுப்பிய பெற்றோருக்கு வெள்ளிப் பதக்கத்தை கலெக்டர் வழங்கினார். 2ம் உலகப்போரில் பணியாற்றிய 100 வயது கடந்த முன்னாள் படைவீரர் சுந்தரராஜன் கவுரவிக்கப்பட்டார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கீர்த்தனா, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் (கூ.பொ) சுகுணா கலந்து கொண்டனர்.

