/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பத்திரகாளி அம்மன் கோயில் விழாவில் பூக்குழி
/
பத்திரகாளி அம்மன் கோயில் விழாவில் பூக்குழி
ADDED : ஜூன் 05, 2025 01:38 AM

நெய்க்காரப்பட்டி: பழநி நெய்க்காரப்பட்டி பெரிய கலையம்புத்துார் ஹைகோர்ட் பத்திரகாளியம்மன் கோயில் வைகாசி விழாவில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பழநி நெய்க்காரப்பட்டி பெரிய கலையம்புத்துார் நடுத்தெருவில் உள்ள ஹைகோர்ட் பத்திரகாளி அம்மன் கோயில் வைகாசி திருவிழா மே 23ல் கொடிமரம் நடுதல் கொடி ஏற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. மே 27ல் அம்மனுக்கு காப்பு கட்டுதல், முகூர்த்தக்கால் நடுதல், சுடாமி சாட்டுதல், ஜூன் 2ல் ரத ஊர்வலம், பால் குட ஊர்வலம் நடைபெற்றது.
ஜூன் 3ல் பூ குண்டம் வளர்த்தல் துவங்கியது. அதன் பின் வானவேடிக்கை நடைபெற்றது. நேற்று (ஜூன் 4) அதிகாலை 6:00 மணிக்கு பக்தர்கள் பூக்குழி இறங்குதல் நடைபெற்றது.
இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கினர். அதன் பின் கிடா வெட்டுதல், பூச்சட்டி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.
இன்று மஞ்சள் நீராட்டு, கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.