/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கோட்டை காளியம்மன் கோயில் விழாவில் பூக்குழி
/
கோட்டை காளியம்மன் கோயில் விழாவில் பூக்குழி
ADDED : மே 01, 2025 06:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலசமுத்திரம்: பழநி பாலசமுத்திரம் கோட்டை காளியம்மன் கோயில் திருவிழா ஏப்.21ல் முகூர்த்தக்கால் நடுதல் உடன் துவங்கியது. ஏப்.22 ல் சுவாமி சாற்றுதல் நடைபெற்றது.
ஏப்.29 ல் ஆற்றில் அம்மன் அலங்காரம் , ஏப்.30ல் அம்மன் கோயிலுக்கு வந்தடைதல் நடைபெற்றது.
காலை 7:00 மணிக்கு விரதமிருந்த நுாற்றுக்கணக்கானோர் பூக்குழி இறங்கினர். அதன் பின் அக்னி சட்டி , மாவிளக்கு, முளைப்பாரி நடைபெற்றது.
இன்று ஆற்றில் முளைப்பாரி கரைத்தல் நடைபெறும். நாளை (மே 2 )சிறப்பு பூஜைகள் நடக்கிறது.