/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தீபாவளியால் பூக்கள் விலை உயர்வு
/
தீபாவளியால் பூக்கள் விலை உயர்வு
ADDED : அக் 31, 2024 02:49 AM
திண்டுக்கல்: தீபாவளியை முன்னிட்டு திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்து மல்லி ரூ.1500க்கும், கனகாம்பரம் ரூ.1200க்கும் விற்பனையானது.
திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் சுற்றுவட்டார பகுதிகளான நிலக்கோட்டை, செம்பட்டி, சிறுநாயக்கன்பட்டி, வெள்ளோடு, சித்தையன்கோட்டை, மயிலாப்பூர், செங்கட்டாம்பட்டி, போடிகாமன்வாடி, செம்பட்டி, வெள்ளோடு. மைலாப்பூர், ரெட்டியார்சத்திரம், வடமதுரை, அய்யலுார், ஆத்துார் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
இங்கிருந்து வியாபாரிகள் மொத்தமாகவும், சில்லரையாகவும் பூக்களை வாங்கி செல்கின்றனர். தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் ரூ.500 க்கு விற்பனையான மல்லி ரூ. 1500க்கு விற்றது.
ரூ. 300 க்கு விற்ற முல்லை ரூ. 1200க்கும், ரூ 500 க்கு விற்ற கனகாம்பரம் ரூ.1200க் கும், ரூ.150க்கு விற்ற ஜாதிப்பூ700க்கும், ரூ.400க்கு விற்ற காக்கரட்டான் ரூ.900 க்கு விற்பனையானது. அதேபோல், சம்பங்கி ரூ.70, செவ்வந்தி ரூ.200, பன்னீர் ரோஸ் ரூ.100 , அரளி ரூ.200 என பூக்கள் விலையுயர்ந்து விற்பனையானது.