/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கருமாரியம்மன் கோயிலில் இன்று பூச்சொரிதல்
/
கருமாரியம்மன் கோயிலில் இன்று பூச்சொரிதல்
ADDED : பிப் 14, 2024 05:13 AM

சின்னாளபட்டி ; சின்னாளப்பட்டி தேவி கருமாரியம்மன் கோயில் மாசி திருவிழாவில் இன்று பூச்சொரிதல் நடக்கிறது.
சின்னாளப்பட்டியில் அம்பாத்துறை செல்லும் ரோட்டின் குளக்கரையில் உள்ள தேவி கருமாரியம்மன் கோயில் திருவிழா பிப். 9ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனுக்கு தினமும் விசேஷ அபிஷேகம், தீபாராதனைகள் நடக்கிறது. நேற்று அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. சுற்று கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
இன்று (பிப். 14 ) சிறுமலையில் உள்ள அசலைக்கு சென்று சிரஞ்சீவி தீர்த்தம் எடுத்து வர அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அதன் பின் ஊர்வலம், மாலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூச்சொரிதல் நடக்க உள்ளது. பிப். 16ல் அம்மனுக்கு 108 மகா சங்கு அபிஷேகம் ,108 கலச பூஜைகள் நடக்கிறது, இதை தொடர்ந்து இரவு கூப்பிடு இறங்குதல்,பிப். 17ல் பால்குடம், அக்னி சட்டி எடுத்தல், பாலாபிஷேகம், பொங்கல் ,தீபாராதனையுடன் அம்மன் கங்கை புறப்பாடு நடைபெறுகிறது.

