/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மழையால் வரத்து குறைய விலை உயர்ந்த பூக்கள் கிலோ மல்லிகை ரூ.2500க்கு விற்பனை

ADDED : டிச 05, 2024 06:19 AM
திண்டுக்கல்: தொடர் மழையால் வரத்து குறைவு, முகூர்த்த தினங்கள் போன்றவற்றால் பூக்களின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது.இது மல்லிகை மட்டும் கிலோரூ.2500 க்கு விற்பனையானது.
திண்டுக்கல் அண்ணா வணிக வளாக பூ மார்க்கெட்டுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பூக்கள் விளைவிக்கப்பட்டு கொண்டு வரப்படுகிறது.
இங்கிருந்து வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது.
இதை வியாபாரிகள் மொத்தமாகவும், சில்லறையாகவும் வாங்கி செல்கின்றனர்.
தொடர் மழையால் வரத்து குறைவு, முகூர்த்த தினங்கள் போன்றவற்றால் தற்போது பூக்களின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. கன மழையால் கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களிலிருந்து வரக்கூடிய பூக்கள் வரவில்லை.
சந்தைக்கு 50 டன் பூக்கள் வரும்நிலையில் 20 டன் பூக்களே வந்துள்ளது.
மேலும் தொடர் முகூர்த்தம் என்பதால் விலையும் அதிகரித்துள்ளது.
அதன்படி கிலோ ரூ.800க்கு விற்ற மல்லிகை ரூ.2500, முல்லை ரூ.1500க்கு விற்பனையானது.
இதேபோல் பச்சை முல்லை ரூ.1800, காக்கரட்டான் ரூ.1000, ஜாதிப்பூ ரூ.800, பட்டன் ரோஸ் ரூ.500, சம்பங்கி ரூ.400, அரளிப்பூ ரூ.400, செவ்வந்தி ரூ.250, செண்டு மல்லி ரூ.100 என விற்பனையானது.