/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கண்ணாடி மாளிகையில் பூத்துக்குலுங்கும் மலர்கள்
/
கண்ணாடி மாளிகையில் பூத்துக்குலுங்கும் மலர்கள்
ADDED : மார் 23, 2026 06:37 AM

கொடைக்கானல்: கொடைக்கானல் பிரையன்ட் பூங்கா கண்ணாடி மாளிகையில் அழகுறப் பூத்துள்ள மலர்களை சுற்றுலா பயணிகள் ரசித்தனர்.
குளுகுளு நகரான கொடைக்கானலின் மையத்தில் உள்ளது பிரையன்ட் பூங்கா. இங்கு பூத்துள்ள பூக்கள் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது. 63வது மலர் கண்காட்சிக்காக பூங்காவில் மலர் படுகைகள் அமைத்து 6 லட்சம் மலர் நாற்றுகள் பராமரிக்கப்படுகின்றன.
இதற்கிடையே இங்குள்ள கண்ணாடி மாளிகையில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு பளிச்சிடுகிறது. இங்கு தொட்டிகளில் ஆந்தோரியம், களஞ்சியம், ஆர்கிட், கேக்டஸ், பால்சம் உள்ளிட்ட மலர் செடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது அழகுறப் பூத்துள்ள மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளன. இதன் பின்னணியில் புகைப்படம் எடுத்து உற்சாகத்தை வெளிப்படுத்துகின்றனர்.

