/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இறுதிச்சடங்கில் ரோடுகளில் வீசும் மலர்களை தடுக்கலாமே; தொடரும் விபத்துக்களால் பலரும் பாதிப்பு

ADDED : நவ 04, 2024 07:25 AM

மாவட்டம் முழுவதும் இறந்தவரின் ஆன்மா சாந்தியடைய உறவினர்கள்,சுற்றத்தார் ஏராளமானோர் இறுதிச் சடங்கில் பங்கேற்கின்றனர். ஏராளமான மலர்கள் அலங்கரிக்கப்பட்டு இறந்தவரின் உடல் ரோடுகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. இவ் வாகனத்தின் பின்னணியில் வருபவர்கள் மலர்களை ரோட்டில் வீசி எறிவது, மின் கம்பிகள், மின் ஒயர்களில் துாக்கி வீசுவதும் என விரும்பத் தகாத நிகழ்வுகளை ஏற்படுத்துகின்றனர்.
மலர்கள் ரோட்டில் வீசப்படுவதால் இவை மழை பெய்யும் தருணத்தில் அழுகி ரோட்டில் வலவலுப்பாகி விபத்துக்களை ஏற்படுத்துகிறது. இது போன்ற செயல்பாடுகளை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தல் செய்த போதும், ஏனோ இதை கண்டு கொள்வதில்லை. மாறாக துக்க நிகழ்விற்கு செல்வோர் மற்றவர்களை துயரத்திற்கு ஆளாக்கும் நிலை உள்ளது. இது போன்று ரோட்டில் வீசப்படும் மலர்களை தவிர்க்க சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் அறிவுறுத்தல் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.