ADDED : மார் 16, 2025 12:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை, ; வடமதுரையில் நேற்று காலை 6:00 மணி அளவில் மூடு பனி தரை பகுதியில் இறங்கி பல கி.மீ., சுற்றளவில் பரவியிருந்தது.
இதனால் 50 மீட்டருக்கு அப்பால் இருந்த எந்த பொருளும் தெரியவில்லை. பின்னர் சூரிய உதயம் ஏற்பட்டதும் மூடுபனி நீர் துளிகளாக மாறி மழை துாறல் போல கீழே விழுந்தன.
இதனால் மூடுபனி படர்ந்திருந்த ரோடு பகுதியை கடந்த வாகனங்கள், தண்டவாள பகுதியில் ரயில்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் குறைந்த வேகத்தில் கடந்து சென்றன.
காலை 7:30 மணிக்கு பனிமூட்டம் முழுதும் விலகி வழக்கமான கால நிலைக்கு மாறியது.