/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தினமும் 20,000 பேருக்கு அன்னதானம்
/
தினமும் 20,000 பேருக்கு அன்னதானம்
ADDED : பிப் 05, 2025 02:41 AM
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் சார்பில் தினமும் பாதயாத்திரையாக வரும் 20,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளது.
பழநி முருகன் கோயில் சார்பில் தைப்பூசம், பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு 2023 முதல் பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
2023ல் ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் எதிர்புறம் உள்ள காவடி மண்டபத்தில் தினமும் 7000 பாதயாத்திரை பக்தர்கள், தாராபுரம் ரோட்டில் கோங்கூர் காவடி மண்டபத்தில் 3000 பக்தர்கள் என 10 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் ரூ.70 லட்சம் செலவில் வழங்கப்பட்டது.
2024ல் 20 நாட்களுக்கு தினமும் 20 ஆயிரம் பக்தர்களுக்கு ரூ.1.40 கோடி மதிப்பில் 4 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்தாண்டு தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு பிப்.5 முதல் 10 வரை 10 நாட்களுக்கு தினமும் ஒட்டன்சத்திரம் ரோடு குழந்தை வேலப்பர் திருக்கோயில் காவடி மண்டபத்தில் 14 ஆயிரம் பக்தர்கள், தாராபுரம் ரோட்டில் கோங்கூர் காவடி மண்டபத்தில் 6000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.