/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பாதயாத்திரை பக்தர்களுக்காக பாத சேவை முகாம்
/
பாதயாத்திரை பக்தர்களுக்காக பாத சேவை முகாம்
ADDED : பிப் 09, 2025 05:27 AM

எரியோடு: பழநி தைப்பூச பாதயாத்திரை பக்தர்களுக்காக எரியோட்டில் திருஅருள் பேரவையினர் சார்பில் பாத, மருத்துவ, அன்னதான சேவை முகாம் நடந்தது.
இவ்வழியே பழநிக்கு பாதயாத்திரை செல்லும் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்ட பக்தர்களுக்கு உதவும் வகையில் 15வது ஆண்டாக நடக்கும் இந்த முகாமில் பக்தர்களது கால்களுக்கு மருந்துகளை தடவி பாத சேவை செய்து அன்னதானம் வழங்கினர்.
கால்நடைத்துறை உதவி இயக்குனர் ராஜேஸ்குமார் தலைமை வகித்தார். ஓய்வு துணை கலெக்டர் சுந்தரகோபால் துவக்கி வைத்தார்.
பேரூராட்சி உதவி இயக்குனர் கணேசன், முன்னாள் இயக்குனர் ராஜேந்திரன், டாக்டர் பாலசந்திரன் முன்னிலை வகித்தனர். ஏற்பாட்டினை திருவருள் பேரவை தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் பழனிச்சாமி, பொருளாளர் மாரிமுத்து, துணைத்தலைவர் நவநீதபாலகிருஷ்ணன் செய்திருந்தனர்.

