sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கால்பந்து லீக்; பட்டுமணி அணி வெற்றி

/

கால்பந்து லீக்; பட்டுமணி அணி வெற்றி

கால்பந்து லீக்; பட்டுமணி அணி வெற்றி

கால்பந்து லீக்; பட்டுமணி அணி வெற்றி


ADDED : நவ 15, 2024 05:41 AM

Google News

ADDED : நவ 15, 2024 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் 2024--25 ஆம் ஆண்டிற்கான கால்பந்து தொடர் லீக் போட்டயில் பட்டுமணி அணி வெற்றி பெற்றது .

புனித மரியன்னை பள்ளி மைதானத்தில் நடந்த போட்டியில் திண்டுக்கல் ஆர்ட்ஸ் டிரஸ்ட் ,செயின்ட் மேரிஸ் கால்பந்து அணிகள் மோதின. 1:1 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் முடிந்தது. பாலாகண்ணன் ,சேதுராஜன் ஆகியோர் கோல் அடித்தனர். பட்டுமணி, செயின்ட் ஜோசப் ப்ளாய் கால்பந்து அணிகள் இடையே நடந்த போட்டியில் 2:0 என்ற கோல் கணக்கில் பட்டுமணி அணி வென்றது. சகாயஜோசப் பாபு, கவுதமன் கோல் அடித்தனர்.

பிளே ஸ்போர்ட்ஸ் கிளப் , கீதா டிம்பர்ஸ் கால்பந்து அணிகள் இடையே நடந்த போட்டியில் 5:0 என்ற கோல் கணக்கில் பிளே அணி வென்றது. துஷ்யா 2, ஜோஸ்வா, சிரில், ஜினோ தலா 1 கோல் அடித்தனர்.

அன்னை ஸ்போர்ட், ஜி.எஸ்., ஸ்போர்ட்ஸ் அணிகள் இடையே நடந்த போட்டியில் 1:0 என்ற கோல் கணக்கில் அன்னை ஸ்போர்ட் அணி வென்றது. ரோஹித் கோல் அடித்தார்.

அரசன் ,மேட்டுபாறை மேரி மாதா அணிகள் இடையே நடந்த போட்டி 1:1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

அரசன் அணியில் தனராஜ், நிஷாந்தனும், மேட்டுபாறை அணியில் கிேஷார், சச்சினும் கோல் அடித்தனர். ஆர்.என்., லக் ஷமணசாமி , எஸ்.எஸ்.எம்., அணிகள் இடையே நடந்த போட்டியில் 5:1 என்ற கோல் கணக்கில் லக் ஷமணசாமி வெற்றி பெற்றது. தமிழ் 3, ஹரிஸ், நித்திலேஷ் தலா ஒரு கோல் அடித்தனர். எஸ்.எஸ்.எம்., அணியின் நிரஞ்சன் கோல் அடித்தார்.

செயின்ட் மைக்கேல், ஜி.ெஹச்.எஸ்.எஸ்., ஓல்டு பாய்ஸ்அணிகள் இடையே நடந்த போட்டி 2:2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. மைக்கேல் அணியில் ரென்சிங் ரெக்ஸ், ரெஜீஸ் ஆகியோரும், ஓல்டு பாய்ஸ் அணியில் மோகன், ரெக்ஸ் கோல் அடித்தனர்.

ராயல் ,சச்சின் சாக்கர் அணிகள் இடையே நடந்த போட்டி 2:2 கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. ராயல் அணியில் கோகும், நிரஞ்சன் , சச்சின் அணியில் சதீஸ், தண்டபாணி கோல் அடித்தனர்.






      Dinamalar
      Follow us