/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சித்தையன்கோட்டையில் சிறுத்தை நடமாட்டம் கேமரா டிராப் மூலம் உறுதிப்படுத்த வனத்துறை ஏற்பாடு

ADDED : டிச 19, 2024 05:31 AM

ஆத்துார்: திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டையில் சிறுத்தை நடமாட்டத்தை கேமரா டிராப் மூலம் உறுதிப்படுத்த வனத்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
சித்தையன்கோட்டை அருகே நரசிங்கபுரம், ஆத்துார் காமராஜர் நீர்த்தேக்க பகுதிகளில் புதர்ச்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. மான், காட்டுப்பன்றி, காட்டுமாடு, மயில் போன்ற விலங்குகள் அதிகம் உள்ளன.
இவை வாழை, சோளம் உள்ளிட்ட சாகுபடியை சேதப்படுத்துவது தொடர்கிறது.
இச்சூழலில் சில வாரங்களாக சிறுத்தை நடமாட்டம் இப்பகுதியில் அதிகரித்து வருவதாக தகவல் வெளியானது.
சிறுத்தை, செந்நாய் நடமாட்டத்தால் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகள், நாய்கள் மாயமாவதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர் .
இதைதொடர்ந்து வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க கேமரா டிராப் கருவியை சித்தையன்கோட்டை தாமரைக்குளத்தை அடுத்த கட்டையடி பகுதி தனியார் தோட்டத்தில் பொருத்தி உள்ளனர்.
வனத்துறையினர் கூறுகையில்,'' சிறுத்தை நடமாட்டம் குறித்த எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
இருப்பினும் பாதுகாப்பு காரணங்களுக்காக இதனை கண்டறிய கேமரா டிராப் வைத்துள்ளோம். வழக்கமான கண்காணிப்பு கேமரா போல் இல்லாமல் மனிதர்கள், வன உயிரினங்கள் நடமாட்டத்தின்போது இவை தானாகவே படம் எடுக்கும் ''என்றனர்.