/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தேவாங்கு பாதுகாப்பு மைய பணி வனத்துறை உயரதிகாரிகள் ஆய்வு
/
தேவாங்கு பாதுகாப்பு மைய பணி வனத்துறை உயரதிகாரிகள் ஆய்வு
தேவாங்கு பாதுகாப்பு மைய பணி வனத்துறை உயரதிகாரிகள் ஆய்வு
தேவாங்கு பாதுகாப்பு மைய பணி வனத்துறை உயரதிகாரிகள் ஆய்வு
ADDED : அக் 26, 2025 05:20 AM
வடமதுரை: அய்யலூர் அருகே நடக்கும் தேவாங்குகள் பாதுகாப்பு மைய பணிகளை வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அய்யலுார், கரூர் மாவட்டம் கடவூர் மலைத்தொடர்களில் 11,806 எக்டேரில் அரிய வகை பாலுாட்டி விலங்கான தேவாங்கு அதிகளவில் வாழ்கின்றன.
இயற்கை பாதுகாப்பான சர்வதேச அமைப்பு அழியும் விளிம்பில் இருக்கும் இன பட்டியலில் தேவாங்கை குறிப்பிட்டுள்ளது.
இவற்றை அழியாமல் பாதுகாக்க சரணாலயம் அமைக்க வேண்டும் இயற்கை ஆர்வலர்கள் நீண்ட ஆண்டுகளாக வலியுறுத்தினர்.
இதன் பலனாக இந்தியாவின் முதல் தேவாங்கு வன உயிரின சரணாலயத்தை அய்யலுார்பகுதியில் அமைக்க மாநில அரசு முடிவு செய்தது.
அதன்படி ஒருபகுதியாக சூழல் சுற்றுலா, தேவாங்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் அய்யலுார் பூனைக் கரடு பகுதியில் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இப்பணிகளை தமிழ்நாடு முதன்மை தலைமை வன பாதுகாவலர் சீனிவாச ரெட்டி, கூடுதல் முதன்மை தலைமை வன உயிரின காப்பாளர் ராகேஷ் குமார் டோக்ரா ஆய்வு செய்தனர்.
தேவாங்குகள் வாழிடங்களையும் வனக்குழுவினருடன் சென்று ஆய்வு செய்தனர். மண்டல வன பாதுகாவலர் முகமது ஷபாப், மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார், வனச்சரக அலுவலர் முருகேசன் உடனிருந்தனர்.

