/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அழகாபுரி அணை பகுதியில் காயும் வனத்துறை மரக்கன்றுகள்
/
அழகாபுரி அணை பகுதியில் காயும் வனத்துறை மரக்கன்றுகள்
அழகாபுரி அணை பகுதியில் காயும் வனத்துறை மரக்கன்றுகள்
அழகாபுரி அணை பகுதியில் காயும் வனத்துறை மரக்கன்றுகள்
ADDED : பிப் 25, 2024 06:05 AM

வேடசந்துார் : குடகனாறு அணைப்பகுதியில் வைக்கப்பட்ட ஐந்தாயிரம் தேக்கு மரக்கன்றுகள் நன்கு வளர்ந்த நிலையில் போதிய மழை இல்லாததால் காய்ந்து வருகிறது. தேக்கு மர கன்றுகள் வீணாவதற்குள் அணைப்பகுதியில் உள்ள தண்ணீரை மர கன்றுகளுக்கு பாய்ச்ச வனத்துறை முன் வர வேண்டும்.
வேடசந்துார் அழகாபுரியில் குடகணாறு ஆற்றின் குறுக்கே குடகுணாறு அணை கட்டப்பட்டுள்ளது. 27 அடி கொண்ட இந்த அணையில் 25.2 அடி தண்ணீர் உள்ள நிலையில் தற்போது பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது. இந்த அணையின் முன் பகுதியில் அழகாபுரி - வேடசந்துார் மெயின் ரோட்டில் இருந்து அணை பகுதி வரை உள்ள காலி இடத்தில் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறை சார்பில் 5 ஆயிரம் தேக்கு மரக்கன்றுகள் நடப்பட்டன. வாகனங்களில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி பராமரிக்கப்பட்டது.
நன்கு வளர்ந்து மரமான நிலையில் வறட்சி காரணமாக தேக்கு மரக்கன்றுகள் காய்ந்து சருகாய் உதிர்கிறது. காய்ந்து வரும் மரங்களை வனத்துறையினர் தண்ணீர் ஊற்றி பாதுகாக்க முன்வராத நிலையில் 90 சதவீத மரங்களில் இலைகள் உதிர்ந்து விட்டன. மரங்கள் காய்ந்து கருகுவதற்குள் தேக்கு மரக்கன்றுகளுக்கு அழகாபுரி அணைக்கட்டு பகுதியில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீரை கொண்டு வந்து பாய்ச்சி மரக்கன்றுகளை பாதுகாக்க வனத்துறை முன் வர வேண்டும் .
............
மிக வலுவாக எழுந்துள்ளது.