ADDED : பிப் 07, 2024 06:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : கோபால்பட்டி கணவாய்ப்பட்டி ஊராட்சி ஒத்தக்கடை பகுதியில் தனக்கன் குன்று உள்ளது. இங்கு நேற்று மாலை திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.
தீ சிறிது நேரத்தில் பரவி சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் பற்றி எரிந்தது.
வாகனங்கள் செல்ல முடியாத குன்று பகுதியில் தீப்பற்றி எரிந்ததால் தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியவில்லை.
இதனால் வனத்துறையினர் மரக்கிளைகளை வைத்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

