/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
செப். 15ல் பழனிசாமி வருகை முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தகவல்
/
செப். 15ல் பழனிசாமி வருகை முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தகவல்
செப். 15ல் பழனிசாமி வருகை முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தகவல்
செப். 15ல் பழனிசாமி வருகை முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தகவல்
ADDED : ஆக 14, 2025 02:43 AM
திண்டுக்கல்: '' திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளில் அடுத்தமாதம் (செப். ) 15 ம் தேதி அ.தி.மு.க., பொதுசெயலாளர் பழனிசாமி சுற்றுப்பயணம் செய்கிறார் '' என முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேசினார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல் மாவட்டம் வருவதையொட்டி மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது: தி.மு.க. ஆட்சி காலம் முடியும் நிலையில் புதிய திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றுகிறது.
பொதுமக்கள், அரசு ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட அனைவருக்கும் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.இதனால் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை பரிசாக வழங்க அரசு ஊழியர்கள் முடிவெடுத்துள்ளனர். அவருக்கு மறைந்த முதல்வர் கருணாநிதியின் மகன் என்பதை தவிர வேறு எந்த தகுதியும் இல்லை.
அதை வைத்து தான் கட்சியை கைப்பற்றினார். அவருக்கு அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமியை பற்றி பேச தகுதி இல்லை.
70 ஆண்டுகளில் தற்போதைய தி.மு.க. அரசு போன்று யாரும் இந்தளவிற்கு அதிக கடன் வாங்கவில்லை. அடுத்தமாதம் (செப்.,) 15 ம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளில் பொதுசெயலாளர் பழனிசாமி சுற்றுப்பயணம் செய்கிறார் என்றார்.
அமைப்பு செயலாளர் மருதராஜ், இளைஞர்,இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் பரமசிவம், முன்னாள் எம்.எல்.ஏ. பழனிசாமி, மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ராஜ்மோகன், மாவட்ட பொருளாளர் பழனிவேல், ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகரன், தர்மராஜ், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பாரதிமுருகன், பகுதி செயலாளர்கள் சுப்பிரமணி, மோகன், வி.டி.ராஜன், சேசு, முரளிதரன், இக்பால், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜேஷ் கண்ணா, மாவட்ட பாசறை செயலாளர் சிவபாரதி, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், முன்னாள் ஆவின் தலைவர் திவான்பாட்சா கலந்து கொண்டனர்.