/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சாதனை, வேதனையை கூறுங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு முன்னாள் அமைச்சர் அறிவுறுத்தல்

ADDED : மே 22, 2025 04:52 AM
திண்டுக்கல்: ''அ.தி.மு.க.,வின் சாதனைகளையும், தி.மு.க., ஆட்சியின் வேதனைகளையும், கொடுமைகளையும் மக்களிடம் நிர்வாகிகள் எடுத்து கூற வேண்டுமென'' அ.தி.மு.க., பூத் கமிட்டி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் கூறினார்.
திண்டுக்கல் சட்டசபை தொகுதி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் தாமரைப்பாடி, ம.மு. கோவிலுார், முள்ளிப்பாடி, சீலப்பாடி, பெரியகோட்டை, பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி பகுதிகளுக்கான பூத் கமிட்டி, இளைஞர் இளம்பெண்கள் பாசறையில் உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஒன்றிய செயலாளர் ராஜசேகரன் தலைமை வகித்தார். அமைப்பு செயலர்கள் ஆசைமணி, மருதராஜ் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேசியதாவது : அனைத்து பகுதிகளிலும் பூத் கமிட்டி அமைத்து ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. இப்பணி வரக்கூடிய சட்டசபை தேர்தலில் பழனிசாமி முதல்வர் ஆவதற்கான ஆயத்த பணிகளில் முதல் பணியாகும். பூத் ஏஜென்ட்கள் மக்களிடம் வீடு வீடாக சென்று அ.தி.மு.க., ஆட்சியின் சாதனை தி.மு.க., ஆட்சியின் வேதனைகளை கொண்டு சேர்க்க வேண்டியது கடமையாகும் என்றார்.
மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சிவபாரதி, முன்னாள் அரசு வழக்கறிஞர் மனோகரன், எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் முத்துசாமி, அம்மா பேரவை துணை செயலாளர் பிரபு, ஒன்றிய அவைத்தலைவர் நந்தகோபால் கலந்து கொண்டனர்.