/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இந்தியாவிலே தமிழகத்தில் தான் ஊழல் ஆட்சி நடக்கிறது முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சாடல்

ADDED : பிப் 09, 2025 05:24 AM
திண்டுக்கல்: ''இந்தியாவிலே ஊழல் நிறைந்த ஆட்சி தமிழகத்தில் தான் நடக்கிறது '' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார்.
திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது : கெஜ்ரிவால் ஊழலின் ஊற்றுக்கண்ணாக மாறியதால் மக்கள் கோபமடைந்து தோற்கடித்து இருக்கிறார்கள். டில்லி தேர்தல் முடிவு ஊழலுக்கு எதிராக அமைந்து உள்ளது. இதனால் தி.மு.க.,வுக்கும் அச்சம் ஏற்பட்டு இருக்கும்.
இந்தியாவில் ஊழல் நிறைந்த ஆட்சி தமிழகத்தில் தான் நடக்கிறது. பெண்களுக்கு உரிமைத்தொகை, இலவச பஸ் பயண திட்டத்தை நம்பி தி.மு.க., இருக்கிறது. ஊழல் நிறைந்த சட்டம்- ஒழுங்கை நிலைநாட்ட முடியாத தி.மு.க.,வையும் மக்கள் தோற்கடிப்பார்கள்.
இடைத்தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்று இருக்கலாம். ஆனால் தமிழகம் முழுவதும் மக்களை அடைத்து வைத்து ஓட்டுக்களை பெற முடியாது. சட்டசபை தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும், என்றார்.