/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கட்டடத்தில் பெயரை அழிக்கலாம் மக்கள் மனதில் அழிக்க முடியாது முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேச்சு

ADDED : செப் 28, 2025 03:26 AM

நத்தம்:''கட்டடங்களில் வேண்டுமானால் எனது பெயரை அழித்து விடலாம்-.மக்கள் மனதில் ஒருபோதும் அழிக்க முடியாது''-என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசினார்.
அ.தி.மு.க., சார்பில் நத்தத்தில் நடந்த அண்ணாதுரை பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது : தமிழகத்தில் தீய சக்தியான தி.மு.க.,வை அப்புறப்படுத்த வேண்டும். ஜெ., ஆட்சியில் கொண்டு வந்த பல நல திட்டங்களையும், வளர்ச்சி திட்டங்களையும் தி.மு.க., ஆட்சியில் நிறுத்தி விட்டார்கள். அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும் அத்தனை திட்டங்களும் - செயல்படுத்தப் படும். அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் நத்தம் தொகுதியில் மட்டும் ஆயிரம் கோடிக்கு மேல் பல்வேறு நலத்திட்ட பணிகள் நடந்துள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு சமூகவிரோத செயல்கள் நடைபெறுகிறது. வளர்ச்சி பணி கட்டடங்களில் என் பெயரை அழித்து விடலாம் மக்கள் மனதில் என் பெயரை ஒருபோதும் அழிக்க முடியாது என்றார்.
மாநில ஜெ. பேரவை இணை செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் ராமராசு, சுப்பிரமணி, சின்ன மணிகண்டன் அம்பலம்,முருகன் முன்னிலை வகித்தனர். அவைத்தலைவர் பிறவி கவுண்டர் வரவேற்றார். தேன்மொழி எம்.எல்.ஏ.,, மேட்டுக்கடை செல்வராஜ், திண்டுக்கல் நெப்போலியன், ஜெ.பேரவை இணைச் செயலாளர்கள் சுப்பிரமணி, ஜெயபாலன், நகர தலைவர் சேக் ஒலி, வர்த்தக அணி ஹரிஹரன், தகவல் தொழில்நுட்ப அணி இணைச்செயலாளர் தினேஷ் குமார், ஒன்றிய ஜெ. பேரவை செயலாளர் எம்.ராஜேந்திரன், இணை செயலாளர்கள் கோபால்பட்டி விஜயன், சேகர், எம்.ஜி.ஆர்., அணி சக்திவேல், பேரூராட்சி கவுன்சிலர் சகுபர் சாதிக், வழக்கறிஞர் முருகமன்னார், சி.ஆர்.ராஜேந்திரன் கலந்து கொண்டனர்.