sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 செங்கோட்டையன் மன்னிப்பு கேட்க வேண்டும் சொல்கிறார்: முன்னாள் அமைச்சர் சீனிவாசன்

/

 செங்கோட்டையன் மன்னிப்பு கேட்க வேண்டும் சொல்கிறார்: முன்னாள் அமைச்சர் சீனிவாசன்

 செங்கோட்டையன் மன்னிப்பு கேட்க வேண்டும் சொல்கிறார்: முன்னாள் அமைச்சர் சீனிவாசன்

 செங்கோட்டையன் மன்னிப்பு கேட்க வேண்டும் சொல்கிறார்: முன்னாள் அமைச்சர் சீனிவாசன்


ADDED : பிப் 16, 2026 06:46 AM

Google News

ADDED : பிப் 16, 2026 06:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: ''பா.ஜ., கட்சியையும், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரனையும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மட்டம் தட்டி பேசியது தவறு. அதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்,'' என, திண்டுக்கல்லில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சீனிவாசன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: நயினார் நாகேந்திரன் வயதில் சிறியவராக இருக்கலாம். ஆனால் எந்த விதத்திலும் செங்கோட்டையனுக்கு குறைந்தவர் அல்ல. உலக நாடுகள் நம் வளர்ச்சியை உற்றுநோக்கும் அளவுக்கு பிரதமர் மோடி தலைமையில் சிறப்பான ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பா.ஜ.,வை மட்டம் தட்டி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். தான்தோன்றித்தனமாக பேசக்கூடாது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, தனிக்கட்சி ஆரம்பிக்கிறாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அதுவரை 'நோ கமென்ட்ஸ்'.

கரூர் சம்பவத்திற்கு பின் தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் 72 நாட்கள் வெளியே வரவில்லை. கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு விஜய் கொடுத்த இழப்பீடு தொகை குறைவானது. நியாயப்படி, அவர்களுக்கு ரூ.ஒரு கோடியை அவர் கொடுத்து இருக்க வேண்டும். சேலத்தில் நடந்த கூட்டத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் பிச்சைக் காசு போல கொடுத்திருக்கிறார். இதுவரை அரசும் நிவாரணம் அறிவிக்கவில்லை.

மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்களை அ.தி.மு.க.,வை விட்டு வெளியே சென்றவர்கள், த.வெ.க., தலைவர் விஜய் அரசியலுக்காக பயன்படுத்தக்கூடாது. 'அனுதாபம் மூலம் எங்களது தொண்டர்களை விஜய் தன் கட்சிக்கு இழுக்கலாம்' என, பார்க்கிறார். அது பகல் கனவு. செங்கோட்டையன் போல சிலர் சென்றிருக்கலாம். அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தமிழக மக்களுக்கு உரியவர்கள். தமிழகத்தில் 'பிசினஸ்' ஆரம்பிக்க வந்த விஜய்க்கு அவர்கள் பொருத்தமாகாது.

அ.தி.மு.க., தி.மு.க., ஓட்டு வங்கி எந்த விதத்திலும் குறையவில்லை. தேர்தலுக்கு பின் விஜய்க்கு 30 சதவீதம் மக்கள் ஓட்டு வங்கி உள்ளது என சொல்லட்டும் நம்பலாம்.

போராடும் அரசு ஊழியர்களை அ.தி.மு.க., காப்பாற்றும். மீண்டும் ஏதாவது அறுவடை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் அ.தி.மு.க.,வில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள் தி.மு.க.வில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு நிச்சயமாக அறுவடை நடக்காது. அன்வர் ராஜா, நிலோபர் கபில் உள்ளிட்டோர் தி.மு.க.,வில் இணைந்திருப்பதால் அ.தி.மு.க.வின் சிறுபான்மை ஓட்டு வங்கிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றார்.






      Dinamalar
      Follow us