/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தி.மு.க.,ஆட்சியில் புதிதாக எந்த திட்டமும் கொண்டு வரவில்லை முன்னாள் அமைச்சர் வேலுமணி பேச்சு

ADDED : டிச 27, 2024 05:24 AM

திண்டுக்கல்: ''தி.மு.க.,ஆட்சியில் புதிதாக எந்த திட்டமும் கொண்டு வரவில்லை''என,முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசினார்.
திண்டுக்கல்லில் அ.தி,மு.க., இளைஞர், இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி அமைத்து கிட்டத்தட்ட 4 வருடம் ஆகிறது.
எந்த திட்டமும் வராமல் ஆட்சி நடக்கிறது என்றால் அது தி.மு.க., ஆட்சி தான். அ.தி.மு.க., கொண்டு வந்த திட்டங்கள் மட்டுமே நடக்கிறது. புதிதாக எந்த திட்டமும் கொண்டு வரவில்லை.
கடந்த ஆட்சியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டு மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்கள் சேர்ந்தனர். மருத்துவக் கல்லுாரி உட்பட பல்வேறு கல்லுாரிகள் பழனிசாமி
ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. 2026ல் பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில் அருமையான கூட்டணி அமையும் என்றார்.
முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன்,உதயகுமார் தலைமை வகித்தனர். இளைஞர்,இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் பரமசிவம், அமைப்பு செயலாளர் மருதராஜ், மேலுார் எம்.எல்.ஏ., செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பழனிசாமி, பிரேம்குமார், மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் ராஜ்மோகன், ஒன்றிய செயலாளர் ராஜசேகர், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாரதி முருகன், மாவட்ட இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலர் சிவபாரதி பங்கேற்றனர்.