ADDED : ஜூலை 31, 2025 03:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை :  திருச்சி   திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில்  வடமதுரை வெள்ளபொம்மன்பட்டி பிரிவு பகுதியில்   70 வயது  முதியவர்   மீது   அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.  காயமடைந்த  அவரை அருகில் இருந்தவர்கள்  மீட்டு சாலையோரம் உட்கார வைத்து  108 ஆம்புலன்சிற்கும் தகவல் தந்தனர்.  அவ்வழியே காரில் சென்ற டாக்டரான  முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ ., பரமசிவம்  காரை நிறுத்தி  முதலுதவி சிகிச்சை அளித்தார்.
ஆம்புலன்சில்  திண்டுக்கல் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

