/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வி.ஏ.ஓ.,வை தாக்க முயன்ற முன்னாள் ராணுவ வீரர் கைது
/
வி.ஏ.ஓ.,வை தாக்க முயன்ற முன்னாள் ராணுவ வீரர் கைது
ADDED : மார் 18, 2025 05:24 AM

திண்டுக்கல்: வக்கம்பட்டியில் நிலத்தை அளக்க சென்ற வி.ஏ.ஓ.,வை தாக்க முயன்ற முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.
வக்கம்பட்டியில் கூட்டு பட்டாவாக இருக்கும் தனது நிலத்தை தனி பட்டாவாக வழங்க வேண்டும் எனக்கூறி அதே பகுதியை சேர்ந்த நாதன் ஆத்துார் தாசில்தாரிடம் மனு கொடுத்தார். அதன்படி வக்கம்பட்டி வி.ஏ.ஓ., அழகேசன், நில அளவையர் உள்ளிட்ட அலுவலர்கள் வக்கம்பட்டியில் சம்பந்தபட்ட நிலத்தை அளவீடு செய்ய முயன்றனர்.
அப்போது பக்கத்து நிலத்துக்காரரான வக்கம்பட்டியை சேர்ந்த முன்னாள் ராணுவவீரர் மெசியா58, வி.ஏ.ஓ.,அழகேசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்க முயன்றார். தாலுகா போலீசார் மெசியாவை கைது செய்தனர்.