/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆங்கில இலக்கியத்தில் செயற்கை நுண்ணறிவு முன்னாள் துணைவேந்தர் வலியுறுத்தல்
/
ஆங்கில இலக்கியத்தில் செயற்கை நுண்ணறிவு முன்னாள் துணைவேந்தர் வலியுறுத்தல்
ஆங்கில இலக்கியத்தில் செயற்கை நுண்ணறிவு முன்னாள் துணைவேந்தர் வலியுறுத்தல்
ஆங்கில இலக்கியத்தில் செயற்கை நுண்ணறிவு முன்னாள் துணைவேந்தர் வலியுறுத்தல்
ADDED : நவ 06, 2025 06:44 AM
சின்னாளபட்டி: ஆங்கில இலக்கியத்தில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த புதுமைகள் புகுத்த வேண்டும் என பெரியார் பல்கலை முன்னாள் துணைவேந்தர் முத்துசெழியன் பேசினார்.
காந்திகிராம பல்கலையில் மானியக்குழு திட்டத்தின் ஆசிரியர் பயிற்சி திட்ட சார்பில் நடந்த ஆங்கிலம் , அயலக மொழிகள் சார்ந்த புத்தாக்க பயிற்சியில் அவர் பேசியதாவது: ஆயிரம் வீடுகளில் இன்றும் விளக்கு எரிய ஆங்கில மொழி வழி கல்வியே உதவுகிறது. மாணவர்களிடையே ஆங்கில ஆசிரியர்களுக்கு என தனி மரியாதை உண்டு. ஆசிரியர்கள் ஆங்கில மொழி மிக எளிமையானது என்பதை உணர்த்த வேண்டும். மாணவர்களுடைய வெற்றியே ஆசிரியர்களின் வெற்றியாகும். மாணவர்களின் வேலை வாய்ப்பிற்கும், நேர்காணலுக்கும் ஆங்கில மொழி திறன் அவசியம். ஆங்கில இலக்கியத்தில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த புதுமைகள் புகுத்த வேண்டும் என்றார்.
காந்தி கிராமம் துணைவேந்தர் பஞ்சநதம் பேசியதாவது: இன்றைய காலகட்டத்தில் கேட்டல், எழுதுதல், படித்தல், வாசித்தலுக்கு ஆங்கில மொழி மிகவும் அவசியம். மாணவர்களிடையே ஆங்கில மொழி குறித்த பயத்தை போக்குவதும், தன்னம்பிக்கை ஊட்டுவதும், அடிப்படை கல்வியை சிறப்புற கற்பித்தலும் ஆசிரியர்களின் முக்கிய கடமையாகும். சரியோ, தவறோ மாணவர்கள் பிற மொழிகளை பேசி பயிற்சி பெறும் வகையில் ஊக்குவிக்க வேண்டும் என்றார்.
திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி வரவேற்றார். பேராசிரியர் பாலசுந்தரி, ஒருங்கிணைப்பாளர் டேவிட்ஜெயராஜ் பிராங்கிளின் பேசினர்.

