/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தசாவதார அலங்காரத்தில் கோட்டை மாரியம்மன்
/
தசாவதார அலங்காரத்தில் கோட்டை மாரியம்மன்
ADDED : பிப் 26, 2024 07:02 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் நடந்த தசாவதார நிகழ்ச்சியில் அம்மன் பல ரூபங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனர்.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா பிப்.8ல் பூத்த மலர் பூ அலங்காரத்தோடு தொடங்கியது. பிப்.9ல் பூந்தேரில் அம்மன் வீதியுலா வரும் நிகழ்ச்சிகள் நடந்தது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.
திண்டுக்கல், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 3,000க்கு மேற்பட்ட பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், கையில் குழந்தைகளோடும் வாயில் அலகு குத்தியும் பூக்குழி இறங்கி கோட்டை மாரியம்மனை தரிசனம் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு தசாவதார நிகழ்ச்சி நடந்தது. கோட்டை மாரியம்மன் காளி,மோகினி,மட்ச ,கூர்மாவதாரம், உள்ளிட்ட 9 அவதாரங்களில் கோயில் வளாகத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதை காண திண்டுக்கல் மட்டுமல்லாது வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து அம்மனை தரிசித்தனர்.

