ADDED : பிப் 27, 2026 07:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் தண்டபாணி நிலையத்தில் பக்தர்கள் தங்க விடுதிகள் உள்ளன. இடும்பன் குடில், குறிஞ்சி விடுதி, வேலவன் விடுதி உள்ளன.தண்டபாணி நிலையத்தில் உள்ள கந்தன் இல்லம், கடம்பன் இல்லம் கட்டட அறைகள் சேதமடைந்த நிலையில் உள்ளன. கோயில் நிர்வாகம் கட்டடங்களை அகற்றிவிட்டு புதிய விடுதி அறைகள் கட்ட ரூ.47.50 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டது. இதுபோல் குடமுழுக்கு நினைவரங்க வளாகத்தில் பக்தர்கள் வரிசையில் செல்ல விரிவுபடுத்தும் வரிசை வளாகம் ரூ.5.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் நடந்தது. கோயில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன், இணை கமிஷனர் மாரிமுத்து, நகராட்சி துணைத் தலைவர் கந்தசாமி அடிக்கல் நாட்டினர்.

