/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கூடுதல் திறன் மின்மாற்றி திறப்பு விழா
/
கூடுதல் திறன் மின்மாற்றி திறப்பு விழா
ADDED : பிப் 27, 2026 07:48 AM

வேடசந்துார்: ரெங்கநாதபுரம் துணை மின் நிலையத்தில் ரூ. 2 கோடியே 77 லட்சம் மதிப்பீட்டில் புதிய 10 மெகாவாட் கூடுதல் திறன் மின் மாற்றி அமைக்கப் பட்டு அதற்கான திறப்பு விழா நடந்தது.
திண்டுக்கல் மின்துறை மேற்பார்வை பொறியாளர் சாந்தி தலைமை வகித்தார்.
வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன் துவக்கி வைத்தார். ஒட்டன்சத்திரம் செயற்பொறியாளர் கமலக்கண்ணன், உதவி செயற்பொறியாளர் முத்துப்பாண்டியன், உதவி மின் பொறியாளர்கள் ராஜா, கோபால கிருஷ்ணன், கார்த்திக், தி.மு.க., நிர்வாகிகள் கவிதா, கார்த்திகேயன், செந்தில்குமார், ரவிசங்கர், இளங்கோ, பூலோகம், சிவசாமி, காங்., மாவட்டத் தலைவர் சாமிநாதன், நிர்வாகிகள் சுப்புராயன், பகவான், பாண்டி பங்கேற்றனர்.

