ADDED : நவ 17, 2025 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி ஆர்.எப்.ரோடு தனியார் ஓட்டல் முன்புறம் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் 4 பேர் தகராறில் ஈடுபட்டனர். அங்கு ரோந்து சென்ற ஏட்டு பிரபு 40, தகராறில் ஈடுபட்டிருந்தவர்களை அமைதியாக போகும்படி அறிவுறுத்தினார். ஆனால் போதையில் இருந்த 4 பேரும் அவரை தாக்கினர். காயமடைந்த பிரபு பழநி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதுதொடர்பாக கொடைக்கானல் ரோடு பகுதி சின்னத்துரை மகன் நித்தியானந்தம் 35, ஆறுமுகம் மகன்கள் வீரசேகர் 32, மணிகண்டன் 28, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் அருள்குமார் 40, ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

