/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
24 கிலோ கஞ்சா பறிமுதல் கடத்திய நால்வர் கைது
/
24 கிலோ கஞ்சா பறிமுதல் கடத்திய நால்வர் கைது
ADDED : மே 26, 2025 02:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: ஆந்திராவிலிருந்து 24 கிலோ கஞ்சா கடத்தி வந்த 4 பேரை திண்டுக்கல்லில் போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., சுப்பிரமணியன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சரவணன், போலீசார் இங்குள்ள பஸ் ஸ்டாண்டில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.சந்தேகப்படும்படி நின்ற நான்கு பேரை பிடித்து விசாரித்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த மணிகண்டன், 44, கணேஷ்பாண்டி 27 மற்றும் இரு சிறுவர்கள் வைத்திருந்த பையில் 24 கிலோ கஞ்சா இருந்தது. இதனை அவர்கள் ஆந்திராவில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.