UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 06:34 PM
அ நிறம் | அளவு
நத்தம்:
நத்தம் அருகே வேம்பரளி அழகர் கோயில் வனச்சரகத்திற்கு உட்பட்ட காடுகளில் வவ்வால்களை வேட்டையாடுவதாக வனச்சரக அலுவலர் சுந்தரவேலுக்கு தகவல் கிடைத்தது.
தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவு வனவர் ராஜ்கோஷ்மி, வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெரிய இந்திய பழ வவ்வால் இனத்தை வேட்டையாட கண்ணிகள் அமைத்த தேத்தாம்பட்டி ராஜேந்திரன் 38, காத்தக்குட்டி 55, செல்வம் 52, உடையாம்பட்டி சங்கர் 48, ஆகிய 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
