/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பாதயாத்திரை பக்தர்களுக்கு இலவச பஸ்
/
பாதயாத்திரை பக்தர்களுக்கு இலவச பஸ்
ADDED : பிப் 11, 2025 05:32 AM
பழநி: பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு இலவச பஸ் வசதி ,முருகன் கோயிலில் கட்டணமில்லா தரிசன வசதியும் செய்யப்பட்டுள்ளது.
பழநி முருகன் கோயில் வரும் பாதயாத்திரை பக்தர்கள் வசதியாக கோயில் நிர்வாகம் சார்பில் போக்குவரத்து துறையுடன் இணைந்து பிப்.10 முதல் 12 வரை மூன்று நாட்கள் இலவச பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.
பஸ்கள் சண்முக நதியில் இருந்து புறப்பட்டு பைபாஸ் சாலை, திண்டுக்கல் சாலை வழியாக பஸ் ஸ்டாண்ட் வந்தடையும். பாலசமுத்திரம் சாலை சந்திப்பு, கொடைக்கானல் ரோடு சாலை சந்திப்பு, இடும்பன் குளம் ,பழநி நகராட்சி பள்ளி தற்காலிக பஸ்ஸ்டாண்ட் என நிறுத்தங்களில் நின்று செல்லும்.
இதே போல் ரயில்வே ஸ்டேஷனிலிருந்தும் பஸ் ஸ்டாண்ட் வரை இலவச பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.
இதை திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம் துவங்கி வைத்தார்.

