/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கட்டணமில்லா பஸ் சேவை பழநியில் துவங்கியது
/
கட்டணமில்லா பஸ் சேவை பழநியில் துவங்கியது
ADDED : மார் 08, 2024 02:14 AM

பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி கிரி வீதியில் முருகன் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு கட்டணமில்லா பஸ் சேவை துவங்கப்பட்டது.
கிரிவீதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழிகாட்டுதல்படி அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று முதல் இங்கு வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோயில் நிர்வாகம் சார்பில் பாத விநாயகர் கோயிலிருந்து கிரி விதி முழுவதும் சுற்றி வரும் வகையில் கட்டணமில்லா பஸ் சேவை துவங்கியுள்ளது. கோயிலுக்கு உபயதாரர் மூலம் வழங்கப்பட்ட பஸ் மூலம் இச்சேவை நடக்கிறது. பக்தர்கள் இந்த பஸ்சில் ஆர்வத்துடன் பயணித்தனர்.

