ADDED : ஜூன் 16, 2025 02:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் செந்தூர் ஆர்த்தோ கிளினிக் சார்பில் இலவச எலும்பு பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் நடந்தது.
இந்திய மருத்துவக் கழக ஒட்டன்சத்திரம் கிளை செயலாளர் ஆசைத்தம்பி துவக்கி வைத்தார்.
எலும்பு சிகிச்சை நிபுணர் சரவண பிரியன் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, வைட்டமின் டி அளவு, எலும்பு பரிசோதனை, ஸ்கேன் செய்து, ஆலோசனைகளை வழங்கினார். மருத்துவமனை மேலாளர் வெங்கடேசன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.