தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/இலவச கண் பரிசோதனை முகாம்

இலவச கண் பரிசோதனை முகாம்

இலவச கண் பரிசோதனை முகாம்


UPDATED : அக் 12, 2026 05:26 PM

ADDED : அக் 12, 2026 05:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 05:26 PM ADDED : அக் 12, 2026 05:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குஜிலியம்பாறை: கரிக்காலி செட்டிநாடு சிமெண்ட் ஆலை, திண்டுக்கல் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கரூர் அரசன் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் கரிக்காலி அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்தது.

செட்டிநாடு சிமெண்ட் ஆலை தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி தலைவர்கள் பொன்னுச்சாமி, ராஜா, தலைமை ஆசிரியை ராதிகா முன்னிலை வகித்தனர்.

இம்முகாமில் 300க்கும் மேற்பட்டோருக்கு கிட்டப்பார்வை, துாரப்பார்வை, கண்புரை, கண்ணில் நீர்வடிதல் உள்ளிட்ட கண் பரிசோதனைகள் செய்யப்பட்டது. இலவச மருத்துவ சிகிச்சை, கண் கண்ணாடிகள், சொட்டு மருந்துகள் வழங்கப்பட்டன. கண் அறுவை சிகிச்சை தேவைப்பட்ட 14 பேர் கரூர் அரசன் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஆலை துணை பொதுமேலாளர் ஜெயபிரகாஷ்காந்த், முதுநிலை மனிதவள மேலாளர் ராஜசேகர், மருத்துவ அலுவலர் கார்த்திக்விஜய், மக்கள் தொடர்பு அதிகாரி வெற்றிவேல் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us