UPDATED : அக் 12, 2026 05:41 PM
ADDED : அக் 12, 2026 05:36 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகர் ஹிந்து முன்னணி சார்பில் மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜா தலைமை வகித்தார். துணைத்தலைவர் விக்னேஷ்ராஜ், ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் நீதிமன்ற தீர்ப்பின்படி திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மாவட்ட செயலாளர் வீரதிருமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல் அய்யலுாரில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஸ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பிரகாஷ், வெள்ளிமுருகன், ரமேஷ், கணேசன், பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
