/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திருமண சவாரி 'புக்' செய்தவர்களுக்கு இலவச மகளிர் டிக்கெட் வினியோகம்
/
திருமண சவாரி 'புக்' செய்தவர்களுக்கு இலவச மகளிர் டிக்கெட் வினியோகம்
திருமண சவாரி 'புக்' செய்தவர்களுக்கு இலவச மகளிர் டிக்கெட் வினியோகம்
திருமண சவாரி 'புக்' செய்தவர்களுக்கு இலவச மகளிர் டிக்கெட் வினியோகம்
ADDED : செப் 26, 2024 10:28 PM
திண்டுக்கல்:திண்டுக்கல் நத்தம் ரோடு போக்குவரத்து கிளை 2க்குட்பட்ட அரசு பஸ் ஒன்று, திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு பயணியரை தினமும் ஏற்றிச் செல்லும்.
இப்பஸ்சை, செப்.,15ல் கோபால்பட்டியைச் சேர்ந்த ஒருவர், கோபால்பட்டி டூ ஆத்துாருக்கு திருமண சவாரிக்காக, 'புக்' செய்தார்.
அதன்படி, அன்று காலை டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆத்துாரிலிருந்து திருமணத்திற்காக கோபால்பட்டிக்கு சென்ற பயணியரை ஏற்றிச் சென்றனர்.
அவர்களுக்கு அதற்குரிய டிக்கெட்டும் வினியோகம் செய்யப்பட்டது. மீண்டும் மதியம் தற்காலிக டிரைவர், கண்டக்டர் அதே பஸ்சை எடுத்து சென்று, கோபால்பட்டியில் பயணியரை ஏற்றி வந்து இறக்கினர்.
அப்போது பயணிகளுக்கான டிக்கெட் வழங்காமல், இலவச மகளிருக்கு வழங்கப்படும் டிக்கெட்களை வழங்கியுள்ளனர்.
செம்பட்டி அருகே பயணியர் இல்லாமல் பஸ் வந்தபோது, பஸ்சில் ஏறிய டிக்கெட் பரிசோதகர்கள் டிரைவர், கண்டக்டரிடம் விசாரித்தனர்.
அப்போது இலவச மகளிருக்கான டிக்கெட் வழங்கியது தெரிய வந்தது. அதையடுத்து இதில் தொடர்புடைய போக்குவரத்துக் கழகத்தை சேர்ந்த இரு அலுவலர்களுக்கு விளக்கம் கேட்டு, 'மெமோ' வழங்கப்பட்டுள்ளது.