/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அடிக்கடி மின்தடை,துார்வாரப்படாத சாக்கடை கொடைக்கானல் 6 வது வார்டில் தொடரும் அவலம்
/
அடிக்கடி மின்தடை,துார்வாரப்படாத சாக்கடை கொடைக்கானல் 6 வது வார்டில் தொடரும் அவலம்
அடிக்கடி மின்தடை,துார்வாரப்படாத சாக்கடை கொடைக்கானல் 6 வது வார்டில் தொடரும் அவலம்
அடிக்கடி மின்தடை,துார்வாரப்படாத சாக்கடை கொடைக்கானல் 6 வது வார்டில் தொடரும் அவலம்
ADDED : ஜூன் 14, 2025 12:18 AM

கொடைக்கானல்: பச்சைமரத்து ஒடை, நாயுடுபுரம், ரைபிள் ரேஞ்ச் ரோடு உள்ளிட்ட பகுதிகளை கொண்ட கொடைக்கானல் நகராட்சி 6வது வார்டில் அடிக்கடி மின்தடை, சரிவர எரியாத தெருவிளக்கு, காட்டுமாடு, தெருநாய்கள் அச்சுறுத்தல், சரிவர சப்ளை செய்யப்படாத ரேஷன் பொருட்கள், குண்டு குழியுமான ரோடு, துார்வார படாத சாக்கடை என ஏராளமான பிரச்னைகள் உள்ளன.
நடவடிக்கை இல்லை
ஆர்.வி.மோகன், ஹிந்து முன்னணி நகரத்தலைவர் : வார்டில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் குடியிருப்பு வாசிகள் அவதிப்படும் நிலை உள்ளது. வார இறுதி நாட்களில் இப் பிரச்னை அதிகப்படியாக உள்ளது. மின்வாரியத்திற்கு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. குப்பை சரி வர அள்ளப்படாமல் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. செங்குத்தான ரோடுகள் சேதம் அடைந்ததால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. காட்டுமாடு. தெருநாய், காட்டுப்பன்றி தொல்லைகளால் குடியிருப்பு வாசிகள் அவதிப்படுகின்றோம். சமூக விரோத செயல்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நள்ளிரவில் டூவீலரில் ஏராளமானோர் வந்து செல்வதால் அச்சப்படும் நிலை உள்ளது. போதைப்பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுகாதாரக் கேடு
பிரதீப், வியாபாரி: வார்டில் சாக்கடைகள் கட்டமைக்கப்படாமலும், சாக்கடைகள் தூர்வாரப்படாமல் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. தெருவிளக்குகள் எரியாத நிலையில் தடுமாறுகின்றனர். வார்டில் நடக்கும் சமூக விரோத செயல்களை கண்காணிக்க சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும். இங்குள்ள விடுதிகளில் இரவு நேர கேளிக்கைகளால் குடியிருப்பு வாசிகள் முகம் சுளிக்கும் நிலை உள்ளது. நாயுடுபுரத்திலிருந்து தாழ்வாக செல்லும் ரோட்டில் ஏற்பட்டுள்ள ஆபத்து பள்ளங்களால் விபத்து அபாயம் உள்ளது. ரேஷன் பொருட்கள் சரி வர சப்ளை செய்யப்படுவதில்லை. கவுன்சிலர் வார்டிற்கு வருவதே இல்லை.
சாக்கடை துார்வாரப்படும்
கணேசன், கவுன்சிலர், (தி.மு.க.,) : வார்டில் இதுவரை ரூ. 2 கோடிக்கு வளர்ச்சி பணிகள் நடந்துள்ளன.ரோடு அகலப்படுத்தும் பணிக்காக சாக்கடைகள் துார்வாரப்படாத நிலை உள்ளது. இப்பணி விரைவில் நடக்க உள்ளது. ரேஷனில் பொருட்கள் சப்ளை செய்யாததை சீர் செய்ய சிவில் சப்ளை தாசில்தார் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். இங்குள்ள விடுதிகளில் நடக்கும் முகம் சுளிக்கும் கேளிக்கையை தவிர்க்க போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். அடிக்கடி ஏற்படும் மின்தடையை சீர் செய்ய மின்வாரியத்திடம் அறிவுறுத்தப்படும். காட்டுமாடு, காட்டுப்பன்றி நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சமூக விரோத செயல்களை கண்காணிக்க சிசிடிவி கேமரா அமைக்கப்படும். குப்பை சரிவர அள்ளாத நிலையை தவிர்க்க நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.