/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வறட்சிப்பகுதியில் பழ மரங்கள்; மாற்றத்தை ஏற்படுத்திய ஆசிரியர்
/
வறட்சிப்பகுதியில் பழ மரங்கள்; மாற்றத்தை ஏற்படுத்திய ஆசிரியர்
வறட்சிப்பகுதியில் பழ மரங்கள்; மாற்றத்தை ஏற்படுத்திய ஆசிரியர்
வறட்சிப்பகுதியில் பழ மரங்கள்; மாற்றத்தை ஏற்படுத்திய ஆசிரியர்
ADDED : ஜன 30, 2025 06:00 AM

வேடசந்துார்: வேடசந்துார் வறட்சி பகுதியில் மலைப் பிரதேசங்களில் விளையக்கூடிய வாட்டர் ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பல்வேறு பழம் வகை பயிர் விவசாயத்தில் முன்னாள் அரசு பள்ளி ஆசிரியர் ஏழுமலை 62 ஈடுபட்டு வருகிறார்.
கூவக்காபட்டி ஊராட்சி கவுண்டச்சிபட்டியை சேர்ந்த இவர் தனக்கு சொந்தமான 18 ஏக்கர் விவசாய நிலத்தில் தென்னை, நெல்லி, மா, சாத்துக்குடி, வாட்டர் ஆப்பிள், எலுமிச்சை, அத்தி, நவா, ஸ்டார் ப்ரூட், அவகோடா, பலா, கொய்யா மரங்களை வளர்த்து வருகிறார்.
இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி விவசாயம் செய்து வரும் இங்கு ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் விளையக்கூடிய வாட்டர் ஆப்பிள், டிராகன், சாத்துக்குடி, கோல்டன் சீதா மரங்களை வளர்த்துள்ளார். இதை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் பேட்ரிக் பார்வையிட்டார்.
அவருடன் குடகனாறு பாதுகாப்பு சங்க தலைவர் ராமசாமி, புதுக்கோட்டை முன்னாள் ஊராட்சி தலைவர் குப்புசாமி, பெட் போர்டு மெட்ரிக் பள்ளி தாளாளர் ஆர். குப்புசாமி உடன் சென்றனர்.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பேட்ரிக் கூறியதாவது: தெற்கு பிரான்ஸ் நாட்டில் கடும் வறட்சி காரணமாக மக்காச்சோளம் மட்டுமே பயிரிடப்படுகின்றனர். இங்கு வந்து பார்த்த பிறகு தான் எங்கள் நாட்டிலும் இதே போன்ற பழம் வகை பயிர்களை பயிரிட வேண்டும் என தோன்றுகிறது என்றார்.

