ADDED : டிச 16, 2024 04:59 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கோயில்கள் பவுர்ணமி சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில், கோட்டை மாரியம்மன் கோயில், பத்ரகாளியம்மன் கோயில், பழநி ரோடு காளியம்மன் கோயில், ஆர்.எம்.காலனி வெக்காளியம்மன் உள்பட பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. பங்குனி மாத பவுர்ணமி என்பதால் சிறப்பு விளக்கு பூஜை, சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
அக்கரைப்பட்டி சடையாண்டி கோயில், தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில் உள்ளிட்ட இடங்களிலும் பவுர்ணமி சிறப்பு அபிஷேகம் நடந்தது. கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், குட்டத்துப்பட்டி பிச்சை சித்தர் கோயிலில் பவுர்ணமி சிறப்பு அபிஷேகம் நடந்தது. தாடிகொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
கன்னிவாடி: தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக, மூலவருக்கு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள், திருவிளக்கு வழிபாடு நடத்தினர்.
அக்கரைப்பட்டி சடையாண்டி கோயில், கோயில், குட்டத்துப்பட்டி பிச்சை சித்தர் கோயிலில், பவுர்ணமி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.
சாணார்பட்டி: கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி யாக பூஜையும் குபேர விநாயகர் கோவில் கும்பாபிஷேகமும் நடந்தது. முளைப்பாரி,தீர்ப்பு அழைத்து வரப்பட்டு 3 கால யாக வேள்வி பூஜைகள் நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கருட தரிசனத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வாராகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.
நத்தம்: கோவில்பட்டி பாமாருக்மணி வேணு ராஜகோபாலசுவாமி கோயிலில் வாராகி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அம்மனுக்கு திருமஞ்சனம், பால், பழம், சந்தனம், தயிர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் திரவிய அபிஷேகமும்,சிறப்பு அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து மழை வேண்டியும், உலக நன்மை வேண்டியும் திருவிளக்கு பூஜை நடந்தது. குட்டூர் அண்ணாமலையார் கோயிலில் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 16 வகையான அபிஷேகங்களும் தீபாராதனைகளும், பூஜைகளும் நடந்தது. கோயில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடந்தது.