ADDED : ஜன 18, 2024 06:27 AM
திண்டுக்கல், : கேலோ இந்தியா விளையாட்டு போட்டியினை முன்னிட்டு நடந்த விழிப்புணர்வு மினிமாரத்தான், அலங்கார ஊர்தி போன்றவற்றை கலெக்டர் பூங்கொடி துவக்கி வைத்தார்.
6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் ஜன. 19 முதல் 31 வரை சென்னை, திருச்சி,மதுரை ,கோயம்புத்துாரில் நடக்க உள்ளது. இதையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மினிமாரத்தான் போட்டி நடந்தது. கலெக்டர் பூங்கொடி துவங்கி வைத்தார். 500-க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி - 2023 விழிப்புணர்வு அலங்கார ஊர்தியினையும் கலெக்டர் துவக்கி வைத்தார். , கேலோ இந்தியா லோகோ, மாஸ்காட், ஒளி , தீம் பாடல் காட்சிப்படுத்தப்பட்டது. ஆர்.டி.ஓ., கமலக்கண்ணன், மாவட்ட விளையாட்டு அலுவலர் கண்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார் கலந்து கொண்டனர்.