ADDED : பிப் 20, 2024 05:54 AM

ஒட்டன்சத்திரம் : ஓடைப்பட்டி அருகே அக்கரைப்பட்டி ஆறேத்து கிணத்து தோட்டத்தில் அமைந்துள்ள கணபதி, கன்னிமார் சுவாமி, கருப்பண சுவாமி, குப்பயண சுவாமி கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது.
பிப். 16 ஆன்று முதலாம் கால யாகபூஜைகள், நவதான்யம் இடல், வெற்றிலை பாக்கு தரிசனம் நடந்தது. இரண்டாம் நாள் இரண்டாம் கால யாக பூஜைகள், கணபதி ஹோமம், சுத்தி பூஜை, ஆலய பூஜை, வாஸ்து பூஜை நடந்தது. நேற்று முன் தினம் மூன்றாம் கால யாக பூஜைகள், கோயில் சுத்தி பூஜைகள், சுதர்சன ஹோமம் நடந்தது. நேற்று நான்காம் கால யாக பூஜைகள், கண் திறத்தல், கனி காணுதல் நடந்தது.
தொடர்ந்து கணபதி, கன்னிமார் சுவாமி, கருப்பணசுவாமி, குப்பயண சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
மகாலட்சுமி பூஜை, சர்வ ஐஸ்வர்ய பூஜை, மிருதங்க ஜெயபூஜை, கோமாதா பூஜை, 101 கலச அபிஷேகம், தீபாராதனை, தேவபிரசன்னம் நடந்தது.
ஏற்பாடுகளை அக்கரைப்பட்டி ஆறேத்து கிணத்துத் தோட்டம் பங்காளிகள் செய்திருந்தனர்.
வடமதுரை : வடமதுரை பாடியூர் இ.புதுாரில் ஆதிசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. பிப்.16ல் கணபதி பூஜையுடன் துவங்கிய விழாவில் நான்கு கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று காலை கடம் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது.
தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில் அர்ச்சகர் சதாசிவம் தலைமையிலான குழுவினர் நடத்தினர். ஏற்பாட்டினை இ.புதுார், எம்.புதுார், மகாலட்சுமிபுரம் கிராம மக்கள் செய்திருந்தனர்.

