ADDED : நவ 08, 2024 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் கந்தசஷ்டியை முன்னிட்டு குழந்தை வடிவில் வீற்றிருக்கும் முருகனுக்கு 16 வகை அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகள் நடந்தது.
பெண்கள் மயில்வாகனம் சிலை முன்பு அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபட்டனர். விழாவை முன்னிட்டு 1008 போற்றி நடந்தது. விரதம் இருந்து வந்த பெண்கள் முருகனை வழிபட்டு சென்றனர்.

