ADDED : செப் 16, 2026 05:22 PM
அ நிறம் | அளவு
வடமதுரை, செப்.17-
அய்யலுாரில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் நடந்தது. சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து சிலைகள் நேற்று மதியம் துவங்கி தீத்தாகிழவனுார் பேசும்பழனியாண்டவர் கோயில் வந்தன. இங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கடவூர் பிரிவு வழியே கடைவீதி சென்றடைந்தது.
அங்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஸ்சங்கர் தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் சக்திவேல், பொதுச்செயலாளர் மோகன்குமார் வரவேற்றனர். மாநில பொதுச்செயலாளர் மனோகரன், பா.ஜ., மாவட்ட துணைத்தலைவர் பாலமுருகன் பேசினர்.
பின்னர் வடமதுரை நகர் வழியே சென்று தும்மலக்குண்டு ரோடு நரிப்பாறை கல்குவாரியில் சிலைகள் கரைக்கப்பட்டன.
