UPDATED : செப் 16, 2026 05:39 PM
ADDED : செப் 16, 2026 05:32 PM
திண்டுக்கல்:திண்டுக்கல் ஆர்.எம்.,காலனி நேருஜி நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 'ஸ்லாப் கபே' திறப்பு விழா நடந்தது.
சிறப்பு விருந்தினராக சினிமா நடிகை துஷாரா விஜயன் பங்கேற்று ரிப்பன் வெட்டி கபேவை திறந்து வைத்தார். தொடர்ந்து கபே வழங்கும் சேவைகளை பார்வையிட்டு, அதன் நிர்வாகத்தினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மாவட்ட தி.மு.க., பொருளாளர் விஜயன் தலைமை வகித்து கபேவின் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். பிரேமா விஜயன் குத்துவிளக்கு ஏற்றி வைத்து வாழ்த்தினார். திறப்பு விழாவையொட்டி கபே வளாகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
குடும்பத்தினர், நண்பர்கள், தொழில் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று கபே நிர்வாகத்தினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஸ்லாப் கபே நிர்வாக இயக்குனர் புவனேஸ்வரன் நன்றி தெரிவித்து பேசுகையில், 'ஆர்.எம்.,காலனியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள எங்களது கபே மூலம் திண்டுக்கல் நகர மக்களுக்கு தரமான உணவு, கபே சேவைகள் கிடைக்கும்' என்றார்.
