ADDED : செப் 18, 2026 05:22 PM
அ நிறம் | அளவு
கொடைக்கானல், செப்.19-
கொடைக்கானலில் ஹிந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் நடந்தது. இக்கட்சி சார்பில் நகரின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு வழிபாடு நடந்த 20க்கும் மேற்பட்ட சிலைகள் நேற்று நாயுடுபுரத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள நீர்நிலையில் சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
