ADDED : ஆக 31, 2025 04:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநியில் விநாயகர் சிலை ஊர்வலம் ஹிந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத், ஹிந்து சக்தி சங்கமம் சார்பில் அடிவாரம் பாலாஜி ரவுண்டானா பகுதியில் துவங்கியது. 140 விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் பங்கேற்றன. பா.ஜ., மாநில செயலாளர் அஸ்வத்தாமன், விஸ்வ ஹிந்து பரிஷத் தென் மாநில தலைவர் ராமகிருஷ்ணன் துவங்கி வைத்தனர்.
ஊர்வலம் ஆண்டவர் பூங்கா ரோடு, பஸ் ஸ்டாண்ட், மயில் ரவுண்டானா, திண்டுக்கல் ரோடு, வேல் ரவுண்டானா, காந்தி மார்க்கெட் ரோடு, தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக வந்து சண்முக நதியில் சிலைகளை கரைத்தனர்.
ஹிந்து முன்னணி மதுரை கோட்ட செயலாளர் பாலன், விஸ்வ ஹிந்து பரிஷத் திருமடங்கள் திருக்கோயில்கள் அமைப்பாளர் செந்தில், ஹிந்து முன்னணி மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.