/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பகுதிநேர வேலை என பணம் மோசடி டெலிகிராமில் வலைவிரிக்கும் கும்பல்
/
பகுதிநேர வேலை என பணம் மோசடி டெலிகிராமில் வலைவிரிக்கும் கும்பல்
பகுதிநேர வேலை என பணம் மோசடி டெலிகிராமில் வலைவிரிக்கும் கும்பல்
பகுதிநேர வேலை என பணம் மோசடி டெலிகிராமில் வலைவிரிக்கும் கும்பல்
ADDED : டிச 11, 2025 05:28 AM
திண்டுக்கல்: பகுதிநேர வேலையில் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் எனக்கூறி டெலிகிராம் செயலி மூலம் வலைவிரித்து பணமோசடி செய்யும் மர்மகும்பல்கள் தொடர்பான புகார்கள் அதிகரித்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் வேகமான முன்னேற்றத்தின் காரணமாக புதுப்புது அப்டேட்கள் வந்துகொண்டிருக்கின்றன.
அதேவேளையில் பொதுமக்களின் அறியாமையை பயன்படுத்தி இணையம் வழியில் பணம் பறிக்கும் சைபர் குற்றங்களும் அதிகரித்துள்ளன. பகுதி நேரமாக ஆன்லைனில் வேலைபார்ப்பதால் நாள் ஒன்றுக்கு ஆயிரம் முதல் 2 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தைக்கூறி பண மோசடி செய்யும் குற்றங்கள் அதிகரித்துள்ளது. டெலிகிராம் செயலி மூலமாக ஆன்லைனில் பகுதிநேரம் வேலை செய்யலாம் எனக்கூறி அறிமுகமாகும் மோசடி நபர்கள், ஓட்டல்கள், தனியார் இணையதள பக்கங்கள், விற்பனை செயலிகள், விடுதிகள் உள்ளிட்டவற்றுக்கு 5 நட்சத்திர ரேட்டிங் வழங்கி அதை ஸ்கீரீன்ஷாட் எடுத்து அனுப்பினால் உடனடியாக யு.பி.ஐ., செயலி மூலம் ரூ.150 சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறி வலைவிரிக்கின்றனர். இதை சோதனை முயற்சி செய்பவர்களின் பண ஆசையை அதிகரிக்க செய்யும்விதம் பேசி குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரத்தை முதலீட்டு பணமாக செலுத்த மோசடிகும்பல் வற்புறுத்துகிறது. பல தவணைகளில் ஆயிரம், லட்சம் என பணம் கறக்கும் கும்பல் ஒருகட்டத்தில் குரூப்களை கலைத்து விட்டு தலைமறைவாகின்றனர். பணத்தை இழந்து பாதிக்கப்பட்டவர்கள் யாரிடம் புகார் அளிப்பது எனத்தெரியாமல் விழிப்பிதுங்கி நிற்கும் நிலை ஏற்படுகிறது. குறுஞ்செய்தி, டெலிகிராம் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என வாய்ப்புகள் வழங்குபவர்கள் மோசடி நபர்களாக இருக்கலாம்.
பொதுமக்கள் விழிப்புணர்வோடு இருப்பது அவசியம் என போலீசார் எச்சரிக்கின்றனர்.

