/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை'யில் சட்டென மாறுது வானிலை
/
'கொடை'யில் சட்டென மாறுது வானிலை
ADDED : டிச 11, 2025 05:28 AM

கொடைக்கானல்: சுற்றுலாதலமான கொடைக்கானலில் குளு குளு சீதோஷ்ண நிலையை அனுபவிக்க பயணிகள் வருகின்றனர்.
சில மாதங்களாக நிலையற்ற வானிலை நீடித்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு நிலை புயலால் இங்கு அவ்வப்போது சாரல் மழை, சுட்டெரிக்கும் வெயில், அடர் பனிமூட்டம், பனியின் தாக்கம், கனமழை, சூறைக்காற்று என கணிக்க முடியாத வானிலை நிலவுகிறது.
நேற்று காலை பனிமூட்டத்துடன் சாரலும் தொடர்ந்து சூறைக்காற்று வீசியது.
மதியத்திற்கு பின் வெயில் பளிச்சிட்டது. மாலை பனியின் தாக்கம் அதிகரித்து வெடவெடக்கும் குளிர் இருந்தது.
உள்ளூர்வாசிகள் , பயணிகள் குளிரை தாங்கும் ஆயத்த ஆடைகளை அணிந்து நடமாடினர். தீ மூட்டி குளிர் காய்ந்தனர். நிலையற்ற வானிலையால் கணிக்க முடியாத சூழல் நிலவுவது குறிப்பிட தக்கது.

